அமைச்சர் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியே! தமிழ் நாடு அரசு தெரிவிப்பு
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்திகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியே என்று தமிழ் நாடு அரசின் சென்னை மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருநாவுக்கரசு என்கிற தலித் இளைஞனை சென்னையில் சூளைமேட்டுப் பகுதியில் 1986 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றார் என்கிற குற்றச்சாட்டு வழக்குக்காக தேவானந்தா ஆஜராக தவறியமையால் மதுரை நீதவான் நீதிமன்றம் 1994 ஆம் ஆண்டு தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது- அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியெனவும் பிரகடனப்படுத்தியது.
ஆனால் கீழ்நிலை நீதிமன்றத்தின்/ மதுரை நீதவான் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவு மற்றும் தேடப்படும் குற்றவாளி என்கிற பிரகடனம் ஆகியவற்றை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மேல்நீதிமன்றத்தில் அமைச்சர் தேவானந்தா ஒரு சில மாதங்களுக்கு முன் மேன்முறையீடு மேற்கொண்டார். இம்மேன்முறையீடு நேற்று சென்னை மேல்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
எதிர்மனுதாரர்களில் ஒருவரான தமிழக அரசின் சார்பில் அரசுத் தரப்பு சட்டத்தரணி பி.குமரேசன் ஆஜராகி வாதாடினார். அவரது வாதம் வருமாறு: ”தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே. பிடியாணை உத்தரவு, தேடப்படும் குற்றவாளி என்கிற பிரகடனம் ஆகியன பிறப்பிக்கப்பட்டு 16 வருடங்களுக்கு பின் தேவானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். இப்பிடியாணை உத்தரவு மற்றும் தேடப்படும் குற்றவாளி என்கிற பிரகடனம் ஆகியவற்றை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார். இந்நீண்ட காலத்துக்குப் பின் இக்கோரிக்கைகளை இந்திய சட்டத்தில் இடம் இல்லை.
” நீதிபதி நீதிமன்ற உத்தரவை எதிர்வரும் 02 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். 01:38 அமைச்சர் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியே! தமிழ் நாடு அரசு தெரிவிப்பு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்திகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியே என்று தமிழ் நாடு அரசின் சார்பில் சென்னை மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு என்கிற தலித் இளைஞனை சென்னையில் சூளைமேட்டுப் பகுதியில் 1986 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றார் என்கிற குற்றச்சாட்டு வழக்குக்காக தேவானந்தா ஆஜராக தவறியமையால் மதுரை நீதவான் நீதிமன்றம் 1994 ஆம் ஆண்டு தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது- அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியெனவும் பிரகடனப்படுத்தியது.
ஆனால் கீழ்நிலை நீதிமன்றத்தின்/ மதுரை நீதவான் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவு மற்றும் தேடப்படும் குற்றவாளி என்கிற பிரகடனம் ஆகியவற்றை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மேல்நீதிமன்றத்தில் அமைச்சர் தேவானந்தா ஒரு சில மாதங்களுக்கு முன் மேன்முறையீடு மேற்கொண்டார். இம்மேன்முறையீடு நேற்று சென்னை மேல்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
எதிர்மனுதாரர்களில் ஒருவரான தமிழக அரசின் சார்பில் அரசுத் தரப்பு சட்டத்தரணி பி.குமரேசன் ஆஜராகி வாதாடினார். அவரது வாதம் வருமாறு: ”தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே. பிடியாணை உத்தரவு, தேடப்படும் குற்றவாளி என்கிற பிரகடனம் ஆகியன பிறப்பிக்கப்பட்டு 16 வருடங்களுக்கு பின் தேவானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.
இப்பிடியாணை உத்தரவு மற்றும் தேடப்படும் குற்றவாளி என்கிற பிரகடனம் ஆகியவற்றை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார். இந்நீண்ட காலத்துக்குப் பின் இக்கோரிக்கைகளை இந்திய சட்டத்தில் இடம் இல்லை.” நீதிபதி நீதிமன்ற உத்தரவை எதிர்வரும் 02 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply