ஹிட்லரின் ஆட்சியையே இலங்கை அரசு இன்று கடைப்பிடிக்கின்றது : மங்கள

சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தையும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக ஒரு லட்சம் பேரைத் திரட்டி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று கண்டியில் இடம்பெற்ற சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“1933ஆம் ஆண்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் ஹிட்லர் அரச அதிகாரங்களைக் கைப்பற்றினார். அது போல் இன்று இலங்கையிலும் நீதிச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு போன்ற பல்வேறு ஆணைக் குழுக்களை ஜனாதிபதி தனது கையில் எடுத்துள்ளார்.

அவ்வாறு எமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட தினம் தான் செப்டம்பர் 8ஆம் திகதி ஆகும். எனவே நவம்பர் 8ஆம் திகதியோடு அதற்கு இரண்டு மாதம் பூர்த்தியாகின்றது. அன்றும் நாடளாவிய ரீதியில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதே விதமாக எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி மூன்று மாதமாகிறது. இருப்பினும் டிசம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமை தினமாகையால் அன்று எமது உரிமை மீறப் பட்ட தினத்தை நினைவுகூருவதுடன் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தி சரத் பொன்சேகாவை மீட்டெடுப்போம்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply