இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் சீன உதவி ஜனாதிபதி மஹிந்தவிடம் சீனப் பிரதமர் உறுதி
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்கை வெற்றிகெள்ள சீனா சகல வித ஒத்துழைப்பினையும் வழங்குமென சீனப் பிரதமர் வென்ஜியாபாவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையி லான முக்கிய பேச்சுவார்த்தையொன்று சீனாவின் சங்காய் நகரில் நடைபெற்றுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீதிபுனரமைப்பு உள்ளிட்ட எதிர்காலத்திட்டங்களுக்கு சீனா பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இதன்போது அந்நாட்டுத் தலைவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் துறைமுகம், விமான நிலையம் மற்றும் மின்சாரத்துறை செயற் திட்டங்களுக்கு சீனா உதவிகளை வழங்கி வருகிறது. அதே போன்று எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
சீனாவிற்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனப் பிரதமர் வென்ஜியாபாவோவிற்கும் மிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் சங்காயில் நடை பெற்றுள்ளது.
இதன் போது இருநாடுகளுக்குமிடையி லான நல்லுறவு, சீன நிதியுதவி மூலம் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழ்நிலையானது அபிவிருத்தி இலக்கு நோக்கிய பயணத்திற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளமை தொடர்பிலும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தமது பூரண ஆதரவை வழங்குவதாக சீனப் பிரதமர் உறுதியளித்துள் ளார்.
சுமுகமாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த் தையின் போது இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் அதனை மென்மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாகவும் இருநாட்டுத் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதேவேளை, சீன நிதியுதவியுடன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டமான துறைமுக நடவடிக்கைகள் குறித்தும் விசேட கலந்துரையாடல் இடம் பெற் றுள்ளது.
சீனாவில் நடைபெறும் எக்ஸ்போ- 2010வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இருநாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் இரவு சிறப்பதிதியாகக் அந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் மேற்படி விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply