சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு பாரிஸில் சிலை – இலங்கை கடும் எதிர்ப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் லா கோர்னியூவ் நகரில் நினைவுச் சிலை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாரிஸிலுள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து தகவல் அறிந்த பிரான்ஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உடனடியாக சிலை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு பிரான்ஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து நாம் வெளிவிவகார அமைச்சில் வினவியபோது வெளிவிவகார அமைச்சும் அதனை உறுதி செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்த சிலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்ஸ் அரசிற்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது 2007ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி சு.ப.தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply