விடுதலைப்புலிகள் மீண்டும் அணி திரள முயற்சி
விடுதலைப்புலிகள் தமிழகத்தை மையமாகக் கொண்டு மீண்டும் அணி திரள முயல்கின்றனர் என, மத்திய அரசு கூறியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு விசாரணை, டெல்லி மேல்நீதிமன்ற தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, சென்னை மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை மீண்டும் டெல்லியில் நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்றது.
மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமர்ஜித் சிங் தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகி விடுதலைப்புலிகள் மீதான தடை தொடரப்பட வேண்டியதற்கான காரணங்கள் குறித்து அறிக்கை அளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள், இலங்கை தமிழர்கள் என்ற போர்வையில் தமிழ்நாட்டிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுழைந்து இருக்கிறார்கள்.
அவர்கள் இந்தியாவில் மீண்டும் அணி சேரும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதால் முக்கிய பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறினார்.
விடுதலைப்புலிகளுக்கு தடையை நீட்டிப்பதற்கு தேவையான காரணங்கள் இருப்பதாக கூறிய அவர், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமானின் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பேச்சு மற்றும் கட்டுரை போன்றவற்றை அவற்றுக்கு ஆதாரமாக குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply