யுத்த காலத்தில் அரசாங்கம் பொதுமக்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டது :கோதபாய ராஜபக்ஷ
பயங்கரவாதத்தின் அபாயங்களை சர்வதேச சமூகம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளை உலக சமூகம் பொதுவான எதிரியாக நோக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மனிதாபிமான மீட்புப் பணியாக அரசாங்கம் பெயரிட்டிருந்தாகவும், அப்பாவி தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் யுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் அரசாங்கம் பொதுமக்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் சில சர்வதேச சக்திகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply