விஷவாயு மழை பெய்தாலும் படையினரை பின்வாங்கச் செய்ய முடியாது: ஜனாதிபதி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின்போது படையினர் மீது விஷவாயு மழை பெய்தாலும் அவர்களை பின்வாங்கச் செய்ய முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
படையினர் அடையும் வெற்றிகள் குறித்த மக்கள் கோஷத்தின் முன்னால் கிளிநொச்சியிலிருந்து வெளிப்படும் துப்பாக்கிச் சத்தங்கள் வலுவிழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையொன்றை இராணுவத்திற்கு வழங்கக் கூடிய தக்க தருணம் இதுவென பெற்றோரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் முன்னொருபோதும் இல்லாத வகையில் சூடுபிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply