அரசாங்கம் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றது : மங்கள சமரவீர

அரசாங்கம் இராணுவ முறையிலான ஆட்சியொன்றை ஏற்படுத்த முயற்சிக்கின்றதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஹித்திட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டின் பல பாகங்களிலும் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ இராச்சியமொன்றை கட்டியெழுப்ப அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதியின் இரண்டாம் தவணைப் பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்காக மில்லியன் கணக்கான மக்களின் பணம் விரயமாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அரசாங்கம் கொண்டாட்டங்களை நடத்தி வரும் அதேண்ளை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் வாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.சமுர்த்தி திட்டம் முதல் இலவசக் கல்வி வரையில் சகல துறைகளிலும் இன்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி அல்லலுறுவதாகவும், போதியளவு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும், சர்வாதிகார ஆட்சிப் பாதையை நோக்கி அரசாங்கம் நகர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply