மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
மகசின் சிறைச்சாலையில் ஜி பிரிவில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடு விக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஶ்ரீ.ரங்கவிற்கு கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த கடிதம் தொடர்பில் தெரிய வருவதாவது.
ஐந்து தொடக்கம் பதினேழு வருடங்களுக்கு மேலாக, அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாங்கள் பல துன்பங்ளை மனதில் சுமந்து கொண்டு மன உலைச்சலுடன் வாழ்கிறோம்.
எவ்வளவோ நல்ல திட்டங்ளை நடைமுறைப்படுத்தும் மாண்பு மிகு ஜனாதிபதி அவர்கள், ஏன் எங்கள் விடயத்தில் மட்டும் இன்னும் கரிசனை காட்டவில்லை. பல வருடங்களாக சிறையில் இருக்கும் நாங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையில் தான் கழிக்க வேண்டுமா? இளவயதில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள எங்களுக்கு திருந்தி வாழ ஏன் சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது?
ஜனாதிபதியின் இரண்டாவது கால பதவியேற்பினை முன்னிட்டு எங்கள் அனைவருக்கும் விடுதலை கிடைக்க வழியேற்படுத்தி தாருங்கள். எமது ஜனாதிபதியின் இரண்டாவது ஆட்சிக் காலத்திலாவது எங்கள் குடும்பங்களுடனும், உறவுகளுடனும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். என்று எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply