ஹஜ் யாத்திரிகரிடம் கூடுதல் கட்டணம் அறவிட்டால் கடும் நடவடிக்கை
ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் அறவிடும் முகவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் டி. எம். ஜயரட்ன அறிவித்துள்ளார். நியாயமான கட்டணம் அறவிடுமாறு முகவர்களுக்கு அறிவித்துள்ள போதும் அதிக கட்டணம் அறவிடுவதாக பிரதமருக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை கருத்திற் கொண்டே பிரதமர் இந்த விசேட அறிவித்தலை விடுத்துள்ளார்.
விமான டிக்கட், தங்குமிட வசதி, உணவு என்பவற்றுக்காகவே இவ்வாறு அதிக கட்டணம் அறவிடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப் பாடுகளை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்ப ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் நேற்று உத்தரவிட்டார்.
ஹஜ் யாத்திரையை பணம் சம்பாதிக்கும் தொழிலாக ஆக்குவதற்கு ஒருபோதும் தான் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் இவ்வாறான முறைப்பாடுகள் இருப்பின் உடனடியாக தனக்கு அறியத் தருமாறும் ஹஜ் யாத்திரிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்வதற்காக 70 முகவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டு இலங்கையிலிருந்து 5800 யாத்திரிகருக்கு ஹஜ் செல்வதற்கு சவூதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply