தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது இந்தியா
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை மேலும் இரண்டு ஆண்டு களுக்கு இந்தியா நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதவான் விக்ரமஜித் சிங் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டு வருவதற்கான போதியளவு சாட்சியங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இந்திய மண்ணைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுக் கூட்டங்கள் மற்றும் இணையத்தின் மூலம் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப புலிகளுக்கு எதிரான இரண்டாண்டு கால தடை நீடிப்பு குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் விடுக்கப்பட்டது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply