மக்களுடன் இணைந்து பாடுபடுவேன் : ஆங் சாங் சூச்சி
விடுதலை செய்யப்பட்டுள்ள பர்மாவின் ஜனநாயகத்திற்கு ஆதரவான தலைவரான ஆங் சாங் சூச்சி, மனித உரிமைகளுக்காகவும், சட்டத்தின் ஆட்சிக்காகவும் தொடர்ந்து போராட போவதாக ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்கள் முன்பு தெரிவித்துள்ளார். விடுதலை செய்யப்பட்ட ஒர் தினத்திற்கு பின்னர் ரங்கூனில் இருக்கின்ற தனது கட்சி தலைமையகத்தில் உரையாற்றிய அவர், நம்பிக்கையை விட வேண்டாம் என்றும், தங்களுடைய லட்சியங்களை எப்படி அடைவது என்பதை மக்கள் எண்ண வேண்டும் என்று கூறினார்.
அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பணிபுரிய தயாராக இருப்பதாக கூறிய ஆங் சாங் சூச்சி, மக்கள் விரும்பினால் பர்மா மீதான தடைகளை நீக்க தான் மேற்கத்தைய நாடுகளுடன் பேச தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 7 ஆண்டுகளாக தான் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக தன்னை சிறை வைத்தவர்கள் மீது தனக்கு எவ்விதமான வஞ்சமும் இல்லை என்றும் ஆங் சாங் சூச்சி உரையில் தெரிவித்தார். அவர், பர்மிய மக்கள் தன்னிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு கொண்டுள்ளார்கள் என்பதை ஏற்று கொண்டுள்ளார்.
ஆங் சாங் சூச்சியை இத்தனை காலமாக வீட்டு சிறையில் வைத்திருந்த இராணுவ அரசுடன் அவர் சமரசம் செய்து கொள்வாரா என்று கேட்டப்போது, தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தான் தீர்க்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் தன்னை மீண்டும் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சம் தனக்கு இல்லை என்றாலும், அவ்வாறு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் அவர் ஒப்பு கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply