ஆசியாவிலேயே வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நடாக இலங்கை உள்ளது

ஆசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இலங்கை இருப்பதாக வீடமைப்பு மற்றும் பொது சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் இடம் பெற்ற தேசிய உணவுகளைப் பிரபல்யப்படுத்தும் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த விமல், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போது தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் விதத்தில் பல பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

அத்துடன் இன்றைய இலங்கைக்கும் முன்னனைய இலங்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இன்று நாம் வாழும் நாடு ஒரு புதிய நாடு. பல வருடங்களாக எம்மை வாட்டிய யுத்தததை முடிவுக்கு கொண்டுவந்த பின் உருவாக்கப்பட்டுள்ள அமைதியான நாடு இது வாகும்.

இவ்வாறான பண்புகளைக் கொண்ட ஒரு நாட்டில் வாழும் குடிமக்களுக்கு பல கடமைகள் உண்டு. தேசிய உணர்வுகளுடன் கூடிய தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் அரச திட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். கோதுமை மா இல்லா விட்டால் எம்மால் வாழ முடியாது என்ற கோட்பாட்டை சிலர் முன்வைக்கின்றனர். ஆனால் இது ஒரு மனோ நிலையாகும். தற்போது எமது பேக்கரிகளில் அரிசி மாவை பாவித்து பாண் தயாரிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

எனவே அரிசி மாவை கோதுமை மா போன்று மெதுமையாக மாற்றக் கூடிய மத்திய நிலையங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். எனவே வெகு விரைவில் அரிசி மா பேக்கரிகள் இயங்கத்தொடங்கும்.

இலங்கையில் உண்மையான தேசிய நோக்குள்ள அரசாங்கமே தற்போதே உள்ளது. நாட்டின் அனைத்து துறையிலும் தேசியத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். விவசாயத்தறையில் இரசாயன பசளை பாவிப்பதையும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்கா மத்திய மாகாண விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply