நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் உடன் வெளியேற வேண்டும் : ஸ்ரீகாந்தா
நாவற்குழியில் அரசாங்கக் காணிகளில் குடியேறிய சிங்களக் குடும்பங்கள் ஒரு வாரத்திற்குள் வெளியேற்றப்பட வேண்டும். தவறி னால் நீதிமன்றங்களை நாடுவதே ஒரேவழியாகும்.இவ்வாறு தமிழ்த் தேசிய விடு தலைக் கூட்டமைப்பின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீ காந்தா தெரிவித்தார். அவரின் இல்லத்தில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,நாவற்குழியில் அரசாங்க காணிகளில் திடீரென குடியேறிய சிங்கள குடும்பங்களின் நடவடிக்கை அரசியல் பின்னணி கொண்டது மாத் திரம் அல்லாது முற்றிலும் சட்டவிரோ த மானதுமாகும்.
தென்னிலங்கையில் இருந்து யாழ்.புகையிரத நிலைய கட்டிடங் களில் அத்துமீறி குடியேறி, தற்போது நாவற்குழிக்கு நகர்ந்து அரசாங்க காணியில் குடியேறியுள்ளனர். இந்த நடவடிக்கையின் பின்னணி யில் பலமானதோர் அரசியல் சக்தி செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இது ஓர் ஆழம் பார்க்கும் நடவடிக்கை. இதனை ஒரு பொழுதும் கைகட்டி பார்த்திருக்க முடியாது. இந்த சிங்கள குடும்பங்களுக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தமாகக் காணிகள்இல்லை. இவர்கள் இங்கு 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வசித்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. ஒருசிலர் இங்கே வாழ்ந்திருக்கக் கூடும்.
நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் இவர்கள் யாழ்ப்பாணத் தில் காணிகளை சொந்தமாக வாங்கி குடியேறுவதையோ அல்லது வாட கைக்கு வீடுகளை எடுத்து வசிப்ப தையோ எவரும் ஆட்சேபிக்க முடி யாது. ஆனால் முன்பு இங்கு வாழ்ந் தோம் எனக் கூறிக் கொண்டு அரசாங்க காணிகளில் அத்துமீறி குடியேறு வதில் அரசியல் நோக்கம் இருப்பது அப்பட்டமானது. இந்த சட்டவிரோத நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டே ஆகவேண்டும்.
அரசாங்கக் காணிகள் தொடர் பில் இலங்கையின் அரசியல் அமைப் பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கமும் வட மாகாண சபையும் அதிகார ஆதிக் கத்தைக் கொண்டுள்ளன. எனவே இந்த இரண்டு தரப்பும் நாவற்குழி விவகாரம் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளன. இச் சட்டவிரோத குடியேற்றவாசி களை சம்பந்தப்பட்ட அரசாங்க காணிகளில் இருந்து அப்புறப்படுத் தவோ அல்லது அவர்களை அங் கிருந்து வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கவோ இலங் கை அரசாங்கமும் வடமாகாண சபையும் தவறினால் நீதிமன்றத் தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply