மீள்குடியேற்றம் திருப்தியில்லை ரணில் அதிருப்தி

இல‌ங்கை‌யி‌‌ல் மறு‌‌சீரமை‌ப்பு ப‌ணிக‌ள் த‌மிழ‌ர் பகு‌திக‌ளி‌ல் ‌திரு‌ப்திகரமாக நடைபெற‌வி‌ல்லை எ‌ன்று எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ர‌ணி‌ல் ‌வி‌க்ரம‌சி‌ங்க இந்தியாவில் குறிப்பிட்டுள்ளார். ‌திரு‌ப்ப‌தி செ‌‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் செ‌ன்னை சென்ற ரணில் விக்ரமசிங்க, ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியுள்ளார். முகா‌ம்க‌ளி‌ல் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் த‌‌மிழ‌ர்களை மீள்குடியேற்றும் ப‌ணிகள் ம‌ந்தமாக நடைபெ‌ற்று வரு‌வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மறு‌‌சீரமை‌ப்பு‌ப் ப‌ணிக‌ளி‌ல் த‌மி‌ழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌‌ம் எ‌ன்று ர‌ணி‌ல் ‌வி‌க்ரம‌சி‌ங்க வ‌லியுறு‌த்‌தியுள்ளார். முகா‌ம்க‌ளி‌ல் த‌ங்‌‌கி‌யிரு‌க்கு‌ம் த‌மிழ‌ர்க‌‌ள் ‌‌நிலை கு‌றித‌்து இந்திய ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இல‌ங்கை ஜனாதிபதி ஒரு‌சிலருட‌ன் ம‌ட்டுமே கல‌ந்து ஆலோ‌சி‌த்து முடிவுக‌ள் எடு‌ப்பதாகவு‌ம், எ‌தி‌‌ர்‌க்க‌ட்‌‌சிக‌ளி‌ன் கோ‌ரி‌க்கைகளை தொட‌ர்‌ந்து புற‌க்க‌ணி‌ப்பதாகவு‌ம் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply