ஜேர்மனியில் அல் – கொய்தா தாக்குதல் நடத்தலாம் பாதுகாப்பு அதிகரிப்பு

அல் – கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற புலனாய்வுப்பிரிவின் தகவலை அடுத்து ஜேர்மனியில் பாதுகாப்பு அதி கரிக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் இடம்பெறும் யுத்தத்திற்கான ஜேர்மனியின் பங்களிப்பினை எதிர்க்கும் வகையில் தாக்குதல் இடம் பெறலாமென அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தோமஸ் டீ மெயிஸ்ரி தெரிவிக்கின்றார்.

இந்தியா அல்லது மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 4 தற்கொலைகுண்டுதாரிகள் வரை வரலாம் எனவும் சனநெரிசல் மிக்க கிறிஸ்மஸ் சந்தைகளில் தாக்குதல் நடத்தலாமெனவும் அந்நாட்டுப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப்புலனாய்வு துறையினரே இது சம்பந்தமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும் அப்பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் இத்தகவலை பேர்லின் உறுதிசெய்யவில்லை. இவ்வறிவிப்பால் மக்கள் பீதியடைய தேவையில்லையென மெயிஸ்ரி வேண்டுகோள்விடுத்துள்ளதுடன் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply