ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 100 பேர் விடுவிப்பு

வவுனியா பூந்தோட்டம் முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேராளிகள் 100 பேர் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு இவர்கள் விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பிரதியமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்படும் இளைஞர், யுவதிகளைப் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நாளை பிற்பகல் 3 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் விஜிதமுனி சொய்ஸா, அமைச்சின் ஆலோசகர் எம்.எஸ். சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பொலநறுவை – சேனபுர முகாமிலிருந்தும் 100 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனுமதி கிடைக்கப்பெற்றதும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிப் பிரமாணத்தையொட்டி 100 பேரை விடுவிப்பதற்கான அனுமதியைக் கோரியிருப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply