இலங்கை – இந்தியா உறவு வலுப்படவேண்டும் : ரணில் விக்ரமசிங்கே
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே அண்மையில் இந்திய திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருமலைக்கு விஜயம் செய்துள்ளார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கோயில் வெளியே செய்தியாளர்களிடம் ரனில் விக்ரமசிங்கே,
இந்தியா – இலங்கைக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படவேண்டிய அவசியம் உள்ளது. தமிழ் அகதிகளுக்கு இலங்கை அரசு எதிர்பார்த்த அளவுக்கு உதவிகள் செய்யவில்லை. முழுவீச்சில் உதவிகள் செய்ய முன் வரவேண்டும். யுத்தத்தினால்ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தினேன். இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை என்று கூறினார்:
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply