யுத்தத் தந்திரங்கள் குறித்து மன்னாரில் படையினருக்கு பயிற்சி
மன்னார் சிலாவத்துறையில் முப்படையினரும் இணைந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். இன்று தொடக்கம் எதிர்வரும் 9 நாட்களுக்கு இந்தப் பயிற்சி நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார். இந்தப் பயிற்சி நடவடிக்கையில் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 2500 படையினர் பங்குபற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று மாலை 3 மணிக்கு இந்த பயிற்சி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, யுத்தம் செய்யும்போது கையாளப்படும் யுத்தத் தந்திரோபாயங்கள் குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply