ஜனாதிபதி என் மீது வைத்துள்ள நம்பிக்கையாலே அதே அமைச்சை எனக்கு மீண்டும் தந்துள்ளார் : ஆறுமுகன் தொண்டமான்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாகவே ஏற்கனவே வகித்த அதே அமைச்சை எனக்கு மீண்டும் தந்துள்ளார். இந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த காலங் களை போன்று எனது சேவைகளை இந்த அமைச்சின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என்று கால் நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா. பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
சகல தரப்பினரின் பூரண ஒத்துழைப்புடன் மக்களுக்காக சிறந்த சேவையை வழங்குவதே எனது நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையின் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் ஆறுமுகன் தொண்டமான் கொள்ளுப்பிட்டியிலுள்ள தனது அமைச்சில் நேற்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சுக்கு வருகை தந்த அமைச்சரை அமைச்சின் செயலாளர் ஏ. எச். கமகே தலைமையிலான குழுவினர் வெற்றிலை களை வழங்கி வரவேற்றனர். ஹிந்துக்களின் பாரம்பரிய முறையில் திலகமிட்டு வரவேற்கப்பட்ட அமைச்சர் சுபவேளையில் முதல் ஆவணத்தில் கையொப்பிட்டு தனது கடமைகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு வருகை தந்திருந்த ஊடகவிய லாளர்கள் மத்தியில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2015ம் ஆண் டளவில் இந்த நாட்டில் பால் உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்துவதே மஹிந்த சிந்தனையின் பிரதான நோக்கமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஐந்தாண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாரிய மாற்றங்கள் ஏற் படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அமைச்சரின் மகள் டாக்டர் கோதை நாச்சியார் உட்பட அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள், நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply