தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் நீதியமைச்சர் ஹக்கீமிடம் கோரிக்கை

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் புதிய நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தம்மை பிணையில் விடுதலை செய்வதற்கு ஒழுங்கு செய்யுமாறு நீதியமைச்சரிடம் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற காரணத்தைக் காட்டி தம்மை தொடர்ந்தம் தடுத்து வைத்திருப்பதில் அர்த்தமில்லை தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். யுத்த காலத்தைப் போன்றே தமது பெற்றோர் தொடர்ந்தும் வேதனைகளை அனுபவித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதனால் தாம் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
 
கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், ஊனமடைந்தர்கள், வயது முதிர்ந்தவர்கள் என பல்வேறு பட்ட 765 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
 
கடந்த காலங்களில் பலர் தமக்கு விடுதலைப் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்த போதிலும் எவரும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை தமிழ் சிறைக்கைதிகள் அனுப்பி வைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply