புலிகளின் பிரச்சார வலையமைப்பு குறித்து அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் : கெஹலிய
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வலையமைப்பு குறித்து அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இலங்கையில் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும், சர்வதேச வலையமைப்பு இன்னமும் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் ஊடக அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கெஹலிய ரம்புக்வெல்ல கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நாட்டுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு முயற்சி மேற்கொள்ளும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டியது உள்நாட்டு ஊடகங்களின் தார்மீக பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அபிவிருத்திப் பாதையை நோக்கி நகர்வதாகவும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply