புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து 26 பேரின் எச்சங்கள் மீட்பு

விடுதலைப் புலிகளின் சித்திரவதை முகாம் எனக் கூறப் படும் ‘விக்டர் பேஸ்’ இல் இருந்து 26 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 16 இனம் காணப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு வல்லிபுரம் காட்டில் ‘விக்டர் பேஸ்’ என்ற முகாமை அண்மித்துத் தோண்டப்பட்ட இரு மனித புதைகுழிகளில் இருந்து பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 26 பேர் கொலை செய்யப்பட்டு புகைக்கப் பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மேற்படி பகுதிகள் இருந்த காலத்தில் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 26 பேரை கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி சுட்டுக் கொன்று அச்சடலங்களை புதைத்ததாகக் கருதப் படும் இடத்தில் தோண்டிய போது மேற்படி எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 16 சடலங்களை இனம் கண்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply