இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வரவேற்கப்பட வேண்டியது : ஜீ.எல்.பீரிஸ்

இலங்கை;ககும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வரவேற்கப்பட வேண்டியதென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வுகளில்  போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய பாதுகாப்புப் பிணைப்பு காணப்படுவதாகவும், இந்த நிலைமை மேலும் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரம், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் இரு தரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply