தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாற்றத்திற்கு வரவேற்பு !

அரசிற்கு தமது ஆதரவை வழங்க கூட்டமைப்பினர் முன்வந்தமை கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. முன்னரே இந்த ஞானோதயம் வந்திருந்தால், எத்தனையோ அப்பாவி உயிர்களை யுத்ததில் பலி கொடுக்காமல் தவிர்த்திருக்கலாம். தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும் தக்க வைத்திருக்க முடியும். வரலாற்றில் எதுவும் சாத்தியமாகலாம் என்ற தீர்க்க தரிசனம் இன்றி அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கட்சிகளை கூட்டமைப்பு முன்னணி உறுப்பினர்கள் வசைபாடினர். இன்று அவர்கள் எல்லோரும் அதையே செய்ய முன்வந்திருப்பதன் மூலம், இனத்துக்கு நல்லது செய்வது, காலம் கடந்தே இவர்களுக்கு புரிகிறது என்பது தெளிவாகிறது.

 
எது எவ்வாறாயினும், தமிழ் மக்கள் எதிர்கால நலன்களை முன்னிட்டு கூட்டமைப்பினர் எடுத்த முடிவு வரவேற்கத் தக்கது. குறிப்பாக புலம் பெயர் காகித வீரர்கள், இதை விமர்சிப்பதை விடுத்து, எமது இனத்திற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க உதவ வேண்டும். இந்த முடிவு எமது இனத்தின் மிக நீண்ட நாள் துன்பங்களை முடிவிற்கு கொண்டுவரும் நல்ல ஆரம்பமாக கருதுவோம்.
உதயராசா
செயலாளர் நாயகம்- சிறி ரெலோ

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply