சிறி ரெலோ தலைவர் பற்றிய செய்திக்கு கடும் கண்டனம்
தமிழ்வின் இணையம் ஆதாரமற்ற குற்றச்சாட்டை சிறிரெலோ தலைவர் மீது சுமத்தியிருப்பதை நாம் முற்று முழுதாக மறுப்பதோடு, வன்மையாகக் கண்டிக்கிறோம். வவுனியா நகர பொலிசாரைத் தொடர்பு கொண்ட பொழுது, இப்படியான குற்றச் செயல்கள் எதுவும் முறையிடப் படவில்லை என்றும், இது ஒரு தவறான செய்தி என்றும் பலர் தம்மோடு தொடர்புகொண்டு இது பற்றி தொலைபேசியில் விசாரிப்பதாகவும், இது ஒரு அப்பட்டமான விஷமிகளின் செயல் எனவும் விசனம் தெரிவித்தனர். முன்னரும் பல தடவைகள் ஈனர்கள் இப்படியான பொய்ச் செய்திகளை வெளியிட்டு சுய இன்பம் பெற்றுக்கொண்டது அனைவரும் அறிந்த விடயமே.
தமிழ்வின் போன்ற ஒரு பொறுப்பான இணையம், இப்படியான ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு தம்மையும் மஞ்சள் பத்திரிகை நிலைமைக்கு தாழ்த்திக்கொண்டுள்ளனர்.
இது பற்றி விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
மத்திய குழு
சிறிரெலோ
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply