கற்பக புரம் குடியேற்ற கிராம மக்களுக்கு ஒபர் (OFERR) நிறுவனம் உதவி

கடும் மழையினால் பாதிக்கப் பட்டிருந்த, வவுனியா கற்பக புரம் கிராம மக்களுக்கு, கூரைத் தகடுகளை வழங்கி ஒபர் நிறுவனம் உதவியது. மழை ஒழுக்கு காரணமாக தவிப்புகுள்ளாகிய நிலையிலே, சிறி டெலோ செயலாளர் நாயகம் திரு. உதயராசாவைத் தொடர்பு கொண்ட மக்கள் நிலமையை எடுதுரைத்தனர். இதற்கு தீர்வு காணும் முகமாக, ஒபர் நிறுவனத் தலைவர் திரு. சந்திரஹாசனைத் தொடர்பு கொண்ட பொழுது, ஒரு சில மணி நேரத்திலேயே, அவர் இந்த உதவி மக்களை வந்தடைய நடவடிக்கை எடுத்தார்.

அதோடு, ஒபர் நிறுவன ஊழியர்களும் கிராமத்திற்கு வருகை தந்து, மக்களின் மேலதிக தேவைகளையும் கேட்டறிந்து தம்மாலான உதவிகளைச் செய்வதாக வாக்களித்தனர்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply