விக்ரமபாகு கருணாரட்ன ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை : புதிய இடதுசாரி முன்னணி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் புதிய இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் கடந்த 29ம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமது கட்சியின் பொதுச் செயலாளர் கலந்து கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென கட்சி அறிவித்துள்ளது.
 
எவ்வாறெனினும், விக்ரமபாகு கருணாரட்ன தற்போது லண்டனில் தங்கியிருப்பதாக கட்சியின் ஊடகச் செயலாளர் நடராஜா ஜனகன் தெரிவித்துள்ளார். கட்சியின் லண்டன் கிளை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தவும், லண்டன் வாழ் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தவும் விக்ரமபாகு கருணாரட்ன பிரித்தானியாவிற்கு விஜயம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply