முல்லைத்தீவுக்கும் கிளிநொச்சிக்கும் இன்று 36 லொறிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது : வவுனியா அரச அதிபர்
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இன்றும் (23) 36 லொறிகளில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு 16 லொறிகளிலும்; முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 20 லொறிகளிலும் இந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேவேளை, வடக்கில் இடம்பெறும் மோதல் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து இன்று வரை 275 குடும்பங்களும் 659 தனி நபர்களும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply