இன்று உதுல் பிரேமரட்ன பிணையில் விடுதலை
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உதுல் பிரேமரட்னவை பிணையில் இன்று விடுதலை செய்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உதுல் பிரேமரட்ணவுக்கு 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையும், 5 லட்சம் ரூபாய் தனிநபர் பிணையும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று பிணை வழங்க அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், உதுல் பிரேமரட்ன எதுவித சுவரொட்டி நிகழ்விகளிலும் மற்றும் மாணவர்கள் நடவடிக்கைள் தொடர்பான கூட்டங்களிலும் முற்றிலும் பங்கு கொள்ளக்கூடாது எனவும் அவ்வாறு மீறி செயற்பட்டால் பிணை மறுக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்படுவார் என்றும் கொழும்பு மேல்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
உயர் கல்வி அமைச்சினுள் அத்துமீறி அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினார் என குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply