ஜனாதிபதியின் தூரநோக்குடனான தீர்மானங்களே நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்கிறது : சரத் அமுனுகம
நிதியமைச்சராகவிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தூர நோக்குடனான தீர்மானங்களே நாட்டை அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் கட்டியெழுப்ப உறுதுணையாகியுள்ளது என அமைச்சர் சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியா, சீனா உட்பட சர்வதேச நாடு களின் உதவிகள் அரசாங்கத்துக்குக் கிடைத் துள்ளதுடன் அதன் மூலம் வடக்கு, கிழக்கு உட்பட சகல பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. புலிகளுக்கு ஆயுதம் வழங்கி நாட்டைச் சீரழிக்க வழிவகுத்த ஐக்கிய தேசியக் கட்சி யினர் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்றிட்டம் குறித்து விமர்சித்து வருவது விந்தையாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் எட்டு வீத அபிவிருத்தியை எட்டுவதானால் சிலருக்கான சம்பள உயர்வு சிலருக்கான கொடுப்பனவு பற்றியெல்லாம் சிந்தித்து செயற்பாடுகளைக் குழப்பிக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் சிறு சிறு விடயங்கள் தொடர்பில் விமர்சிக்கும் எதிர்க்கட்சி அரசாங்கம் அபிவிருத்திக்கு எந்தளவு நிதியை செலவிடுகிறது என்பதை சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விவசாயத்துறை பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. வடக்கில் கொப்பேகடுவ காலம் போன்று மீண்டும் விவசாயப் புரட்சி ஒன்றை மேற்கொள் வதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
விவசாய அபிவிருத்தி நடவடிக்கை களுக்காக 50 மில்லியன் ரூபா செலவில் வடக்கில் பல புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமது ஆட்சிக் காலத்தில் புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கியவர்கள் வடக்கின் அபிவிருத்தி பற்றி பேசும் அருகதையற்றவர்கள்.
நாட்டில் முன்னெப்போதுமில்லாதவாறு உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த அபிவிருத்தி செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஒரு மில்லியன் ரூபா வீதம் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகின்றன.
நாட்டிலுள்ள 20 மில்லியன் மக்களில் 18 மில்லியன் பேர் தற்போது தொலைபேசி பாவனையாளர்களாகவுள்ளனர். அடிமட் டத்திலிருந்த மக்கள் நடுத்தர வர்க்கமாக மாறியுள்ளார்கள். அதேபோன்று மத்திய தரத்திலுள்ளோர் முதல் தரத்திற்குச் செல்கின்றார்கள்.
8 வீத பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இத்தகைய மாற் றங்கள் இயல்பானதே. பூகோள மயமாக் கலின் நன்மைகளை நாமும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான திட்டங்களிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியா இலங்கைக்கு வழங்கும் சகல நிதி உதவிகளுக்கும் மேலதிகமாக ஐம்பதினாயிரம் வீடுகளை அமைத்து தர முன்வந்துள்ளமையும் எமக்கான வெற்றிதான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply