ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஊடாக தீர்வை உலகுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை திசை திருப்பிவிட்டனர்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் உரையில் தெளிவுபடுத் துவதற்கு நான் திட்டமிட்டி ருந்தேன். இதனூடாக எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதன் ஒரு வெளிப்பாடே. ஆனால் வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுரிமை அளித்திருக்கின்றோம்.

இதேவேளை, இராணுவத்திற்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். இராணு வத்திற்குள் சந்தேகத்தை தோற்றுவித்து பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்யாதீர்கள் என நான் கேட்டுக் கொள்ளுகின்றேன். வரவு – செலவுத்திட்டம் மீதான விமர்சனங்கள் மீது கவனம் செலுத்துவேன். சிலர் தாம் விரும்புவதை எங்களுக்கூடாகச் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.

பாதுகாப்பு செலவீனம் தொடர்பாக சபையில் பேசப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்தில் 209 பில்லியனில் 88 வீதம் அதாவது 184 பில்லியன் ரூபாயைத்தான் பாதுகாப்புக்குச் செலவிடுகிறோம். பாதுகாப்புச் செலவீனம் என்னும் போது மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல் கொழும்பு நகர அபிவிருத்தி போன்றவைகளும் உள்ளடங்கியவை என்பதை மறந்துவிடக்கூடாது. படையினர் இப்போது முழுமையான அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு சமாதான ஆண்டாகும். அதேநேரம் பூரண நிதியா ண்டாகும்.

தேசிய பாதுகாப்புக் கருதி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உலகில் சிறந்த சமாதான படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாத முதலீடாக பாதுகாப்புச் செலவீனத்தைக் கருத முடியும்.

இதேநேரம், பட்ஜட் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் மார்ச் மாதத்தில் இடம்பெறும். இதற்கு எதிர்க்கட்சியினரும் அழைக்கப்படுவர்.

நீதிமன்றக் கட்டமைப்பை சர்வதேசமயப்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். இதற்கு இடமளியாது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை பேணப்படும்.

இலங்கை மண்ணில் கால்வைத்திராத சிலர் இலங்கையைப் பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றப் பார்க்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply