மீண்டும் ஓர் ஆயுதக்குழு உருவாக இடமளிக்கக் கூடாது : பாதுகாப்புச் செயலாளர்

நாட்டின் பாதுகாப்பில் இராணுவத்தினரின் பங்கு அளப்பரியது. நாட்டுக்கு முக்கிய பங்காற்றுபவர்கள் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மீண்டும் ஓர் ஆயுதக்குழு உருவாக இடமளிக்கக் கூடாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன் தெரிவித்தார். பொலன்னறுவை மாதுறுஓயவில் இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் 400 பேர் தமது பயிற்சிகளை முடித்து இன்று வெளியேறினர். அந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“முப்பது வருட யுத்தத்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். ஆயுதக்குழுவொன்று உருவாகியமையே இதற்குக் காரணம். இனியொரு ஆயுதக்குழு உருவாக எப்போதும் இடமளிக்கக் கூடாது. இனி அபிவிருத்தியை நோக்கியே எமது பயணம் ஆரம்பமாக வேண்டும்” என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்..

இந்த நிகழ்வை முன்னிட்டு பொலன்னறுவை நகர்ப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply