தேசிய சுதந்திர முன்னணி அரசுடன் இணைகின்றது 28 ஆம் திகதி ஒப்பந்தம்
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுபநேரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது.
அலரிமாளிகையில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் கைச்சாத்திடுவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கலைக்கப்பட்ட இரு மாகாண சபைத்தேர்தல்களிலும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ள தேசிய சுதந்திர முன்னணி அது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்துடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்மானமொன்றை எடுக்கவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply