தமிழ் கட்சிகளின் அரங்கம் – TNA இணைந்து தீர்வு யோசனை தயாரித்து அரசிடம் கையளிக்கவுள்ளன
தமிழ் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் யோசனை ஒன்றை தயாரித்து அதனை அரசாங்கத்திடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அரங்கமும் கூட்டமைப்பும் அண்மையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் மூன்று உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு, அந்த குழு இனப்பிரச்சினைக்கான தீர்வை தயாரிக்கும். இந்த தீர்வு திட்டத்திற்கு இரண்டு கூட்டணி கட்சிகளின் அனுமதியை பெற்ற பின்னர், அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். இரண்டு மாதங்களுக்குள் இந்த தீர்வு திட்டத்தை தயாரித்து அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply