2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு வெளியிட்டுள்ளது. எனினும், பணவீக்க வீதம் உயர்வடைந்து செல்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. துண்டு விழும் தொகை, நிதி கட்டமைப்பு, கடன்கொடுப்பனவு போன்ற துறைகளில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச போட்டிகளை ஈடுகொடுக்க வேண்டுமானால் அந்நியசெலாவணி கொள்கைளில் நெகிழ்வுத் தன்மை காணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
2011ம் ஆண்டில் வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 வீதமாக பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
 
வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதிக் கொள்கைகளை கருத்திற் கொண்டு அடுத்த கட்ட கடனுதவியை வழங்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply