குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்க நாடு முழுவதிலும் பாதுகாப்பு கெமரா டிசம்பர் 21ல் ஆரம்பித்து வைப்பு

பாதாள உலகக் குற்றவாளிகள், திருட்டுக் கும்பல், கப்பம் பெறுவோர் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோரை மடக்கிப் பிடிப்பதற்கு கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட உள்ளன.உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இந்த முறைமை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க இலங்கையிலும் பயன்படுத்தப்படவுள்ளன.

தற்போது கொழும்பு நகரிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் பொருத்தப் பட்டுள்ள கெமராக்கள் எதிர்வரும் 21ம் திகதி பி.ப. 1.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக இயங்குவதற்கு ஏற்ற வகையில் ஆரம்பித்து வைக்கப்படும். இந்தப் பாதுகாப்பு கெமரா பொருத்தும் திட்டம் இதற்கு பல வருடங்களுக்கு முன்னர் முன் மொழியப்பட்ட போதிலும் அதற்காக செலவாகும் தொகை அதிகமாகக் காணப் பட்டமையால் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

எனினும், பல்வேறு குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிப்பதற்காகவும் நாட்டிலே குற்றச் செயல்கள் இடம்பெறு வதை முற்றாகத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பு கெமரா பொருத்தப்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வலியுறுத்துகின்றார். இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற எச்.எஸ்.பீ.சி. வங்கியில் 7 கோடி ரூபா கொள்ளை உட்பட நாட்டிலே நிகழ்ந்த பாரிய கொள்ளைகள் தொடர்பான சூத்திரதாரிகளை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கான காரணம் பாதுகாப்புத் துறையினரிடம் சிக்காது பல உபாயங்களை திருட்டுத்தனமாக பாவித்து செயற்படுவ தாகும். எனினும், பாதுகாப்பு கெமரா பொருத்தப்பட்டதன் பின்னர் நாள் முழுவதிலும் அனைத்து விடயங்களும் வீடியோவில் பதிவாகும்.

கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத் திட்டமானது, அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதிற்கும் விஸ்தரிக்கப்படும். இந்த பாதுகாப்பு கெமரா பொருத்தப்பட்டதன் பின்னர் இதனை கண்காணிப்பதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை உள்ளடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply