தேசத்துரோக சக்திகள் உருவாக ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை : இராணுவத் தளபதி

சர்வதேச ரீதியில் எந்தவித சக்திகள் தலைதூக்கிய போதிலும் இலங்கைக்குள் மீண்டும் தேசத்துரோக சக்திகள் உருவாக ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை இராணுவ தளபதி என்ற வகையில் பொறுப்புடன் கூறிக் கொள்வதாக லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.இலங்கை இராணுவத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கவச வாகனங்களை பெற்றுக் கொள்வது தொடர்பாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இராணுவ கவச படையின் 55வது ஆண்டு பூர்த்தி விழா மோதரையிலுள்ள இராணுவ கவச வாகன தலைமையகமான “ரொக் ஹவுஸ்” முகாமில் நேற்று இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு வழங்கப்பட்ட விசேட மரியாதை

அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட இராணுவத் தளபதி இங்கு கூடியிருந்த உயர் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் மத்தியில் மேலும் உரையாற்றுகையில், யுத்த நிலைமைக்கு பின்னர் நாட்டில் உள்ள அனைத்து இனத்தையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. அழிந்து போன மக்கள் வாழ்க்கையை நாம் காப்பாற்றிக் கொடுத்தது போன்று மீண்டும் நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய நம்பிக்கை எழுந்துள்ளது.

மக்கள் மத்தியில் எழுந்து வரும் நம் பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டிய காலம் எழுந் துள்ளது. யுத்தம் முடிவுற்று முழு இலங் கையும் ஐக்கியப்பட்டுள்ள நிலை யில் எதிர்காலத்தில் முன்னரைவிட சவால்களுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் நாட்டை கட்டியெ ழுப்புவதன் ஊடாக இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்று வதற்கு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவருக்கும் பாரிய பொறுப்புள்ளது என்பதை நான் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.

மனிதாபிமான நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்ததன் மூலம் பயங்கரவாதிகளிடம் சிக்கி பாதிக்கப் பட்ட மக்களை நாம் மீட்டெடு த்தோம். அந்த மக்களை பாதுகாப் பதுடன், அபிவிருத்திகளை உயர் மட்டத்திற்கு எடுத்தச் செல்வது அனை த்து படை வீரர்களினதும் கடமையாகும்.

தேசத்தை கட்டியெழுப்பும் அதே சமயத்தில், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கு படை வீரர்களான நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண் டும். அதற்காக அனைத்து படைவீரர் களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக பாதுகாப் புச் செயலாளர் கோத்தாபய ராஜ பக்ஷவினால் வழங்கப்படும் வழி காட்டல் இராணுவத்திற்கு மாபெ ரும் சக்தியாகும்.

எந்தவொரு நிலைமைக்கும் முகம் கொடுக்க இராணுவம் மேலும் பலமடைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

இராணுவத்தை மேலும் பலப் படுத்தும் வகையில் ரஷ்யாவிலிருந்து நவீன கவச வாகனங்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சுவார் த்தை நடைபெற்று வருகின்றது. இவ்வாறு பலப்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் சேவையாற்றுவதற்கு கவச படை பிரிவைச் சேர்ந்த படை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது எனது எதிர்பார் ப்பாகும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply