மன்மோகன் சிங், சிதம்பரம், கருணாநிதியை கொலை செய்ய புலிகள் திட்டமாம்
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் வரவிருந்த நிலையில், புலிகள் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியிருந்தனர் என தெரியவந்துள்ளது. தமிழக கடலோரப் பகுதி வழியாக புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக தமிழக பொலிஸார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியிருந்ததாகவும் பொலிஸ் மற்றும் உளவுத்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply