சங்கானை வாள்வெட்டுச் சம்பவம் – சந்தேக நபர்களுடன் இராணுவத்தினரும் கைது
யாழ். சங்கானையில் பூசகர்கள் மூவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் அவர்களுக்கு ஆயுதம் வழங்கிய இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.போதைக்கு அடிமையான இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இராணுவச் சிப்பாய்க்கு உதவிசெய்ததாகக் கூறப்படும் மற்றுமொரு இராணுவ வீரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply