லியம் பொக்ஸ் இலங்கை விஜயம் ரத்து
இவ்வார இறுதியில் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை பிற்போட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோஜ் யுத்த குற்றச்சாட்டு சர்ச்சை நிலவி வரும் நாட்டுக்கு பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் செல்லவதுக்கு பாரிய கண்டனம் தெரிவித்ததால் இவ்வாறு அவரது பயணம் காலவரையரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளரின் பேச்சாளர், கல்ப் பிராந்தியங்களுங்கான விஜயம் ஒன்றினை உடனடியாக மேற்கொள்ள வேண்டி உள்ளதினாலேயே இப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது தனிப்பட்ட விஜயம் தற்போது தடைப்பட்டிருந்தாலும், அவர் அடத்த வருடம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என யூகே பிரஸ் அசோசியேசன் அறிக்கை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply