ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் வெளிநாட்டவர் குறித்து விசாரணை

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு பிரஜைகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் வருகின்றனரா என்பதை கண்டறிய புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பில் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு புலனாய்வு பிரிவுகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
 
அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தொடர்பாகவும் முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோ படங்களை கொண்டு அதில் கலந்துக்கொண்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் இலங்கை செல்லும் பட்சத்தில் விசாரணைகளுக்காக அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply