தமிழர் பிரச்சினை தொடர்பான அறிக்கை தயாரிக்க அறுவர் நியமனம்
கிளிநொச்சி யாழ்ப்பாணம் வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மூன்று பிரதிநிதிகளை நேற்று நியமித்துள்ளது. கொழும்பிலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பிலேயே மூன்று பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரியும் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தாத்தனும் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அ.இராசமாணிக்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர இந்த மூவர் உட்பட மேலும் இருவரை உப குழுவில் இணைக்க வேண்டும் எனவும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்றைய சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் வி.ஆனந்தசங்கரி சிறி ரெலோ சார்பில் பி.உதயராசா ஜி.சுரேந்திரன் புளொட் சார்பில் த.சித்தாத்தன் சதானந்தன் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை ஏதிலியர் அமைப்பின் சார்பில் றெமீடியஸ் செல்வக்குமார் மாணிக்கவாசகர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராசமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம்மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பினை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா சுரேஸ் பிறேமச்சந்திரன் சுமந்திரன் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply