இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்

இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென தேசிய மொழி அமைச்சர் வாசுதேவ நாணக்கார தெரிவித்துள்ளார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 1951ம் ஆண்டு முதல் அமுலிலிருந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இரு மொழிக் கொள்கையை வரவேற்பதாகவும் தேசிய கீதம் இரண்டு மொழிகளிலும் பாடப்படுவதனை தாம் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஓரே தேசிய கீததத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் உள்ளடக்கப்பட்டால் மேலும் சிறப்பாக அமையும் என அவர் சுட்டிக்காட்டிள்ளார். தேசிய கீதம் பாடப்படும் போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாடல் வரிகள் பாடப்படுவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வினை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உலகின் சில நாடுகளில் தேசிய கீதம் பாடப்படும் முறையை பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக தென் ஆபிரிக்காவில் ஒரே தேசிய கீதம் பல மொழிகளில் பாடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply