இலங்கை தூத்துக்குடி கப்பல் சேவை இன்னும் இரு மாதங்களில் ஆரம்பம்
இலங்கையின் கொழும்பு நகரம் மற்றும் இந்திய தமிழ்நாடு தூத்துக்குடிக்கு இடையிலான படகு சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 3,686 கோடி ரூபா செலவில் டுடிகோரின் மற்றும் சென்னை ஆகிய துறைமுகங்களை புனரமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சென்னையில் முகாம்களை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனைத்துத் திட்டங்ளினதும் முதல் கட்ட நடவடிக்கைகளை 2013ம் ஆண்டில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், இரண்டாம் கட்டம் 2017ல் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply