இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நான் நேரடியாகத் தலையிடுவேன்

இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு ஏராளமாகச் செய்திருக்கிறது. அத்துடன் நான் இலங்கைத் தமிழர் பிரச்சினையை அவதானித்துக் கொண்டிருக்கிறேன் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் என ஐ.பி.என் செய்திச் சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியுடன் தமிழகத்தைச் சார்ந்த அறிவு ஜீவிகள், திரைப்படத்துறையினர், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடுவதற்கான ஏற்பாடு ஒன்றை காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைத்திருந்தது.

இச்சந்திப்பின் போது பல்வேறு விதமான கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதிலளித்தார். இலங்கைத் தமிழர் விஷயத்தில் இந்தியா நடந்து கொண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பிய போது இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா ஏராளமாகச் செய்திருக்கிறது என்றார்.

என்ன செய்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை ஊடகவியலாளர் கேட்ட போது என்ன செய்ய வேண்டும் என எதிர்ப்பாக்கிறீர்கள் என்று ராகுல் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள பத்திரிகையாளர்கள் ஆட்சியில் இருப்பது நீங்கள்தான் உங்களுக்குத்தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வேண்டும். என்று சொல்ல நான் இலங்கைத் தமிழர் பிரச்சினையை அவதானித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விரைவில் நான் நேரடியாகத் தலையிடுவேன். என்று கூறியுள்ளார் ராகுல்காந்தி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply