வடக்கு ரயில் பாதை நிர்மாணப் பணிகளில் 200 இந்திய பொறியியலாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வடக்கு ரயில் பாதை நிர்மாணப் பணிகளில் 200 இந்திய பொறியியலாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரி விக்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்திற்கு ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு மேலதிகமாக நூறு இலங்கைப் பொறியியலாளர்களும் நிர்மாணிப் பணிகளின் போது சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இந்திய ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
பணிகளை மேற்கொள்வதற்காக 100 தொழில் நுட்பவியலாளர்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமந்தைக்கான ரயில் பாதைக்காக 185 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மதவச்சி-மடு பிரதேசத்திற்காக 81 மில்லியன் அமெரிக்க டொலர்களும், தலை மன்னார் ரயில் பாதைக்காக 149 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலவிடப்படவுள்ளன.
ரயில் பாதை நிர்மாணப் பணிகளுக்காக இந்தியா சலுகை அடிப்படையில் கடன் வழங்கியுள்ளது.
ரயில் பாதை நிர்மாணப் பணிகளில் 2000 இலங்கைத் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரயில் பாதைகளை நிர்மாணம் செய்வதற்கு முன்னர் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியது அவசியமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply