யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ், பிரதியமைச்சர் முரளீதரன்(கருணா) ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாண பிரதேச செயலக மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோருடன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விநாயகமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடாநாட்டு மக்களுக்கனெ இந்த நிகழ்வில் 45 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருள்கள் வழங்கப்படுவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் குறிப்பிட்டார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் விடயம் என்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின்(உதயன்) ஆகியோர் உரையாற்றும்போது தெரிவித்தனர்.

“பேதங்களை மறந்து எமது மக்களின் நல்வாழ்வுக்காக இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும்” என்று பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி உதயன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இறுதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருள்களை அமைச்சர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

முன்னதாக, கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன மற்றும் பிரதியமைச்சர் முரளீதரன் ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கலந்துகொண்டிருந்தார்.

நொவெம்பர் 27ம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றும் நிகழ்விலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சத்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் மக்களின் நலவாழ்வுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று முன்னதாக கருத்துவெளியிடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply