கடத்தல்கள், கப்பம் கோரல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : கோதபாய ராஜபக்ஷ
கடத்தல்கள் மற்றும் கப்பம் கோகாரல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதற்காக கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என்பதனை விசாரணை செய்வதற்காக காலம் தாழ்த்தப்பட மாட்டாது எனவும், உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்கள் குறித்து உடனடியாக பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ளார். தமிழ் வர்த்தகர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபி வெனுவன் அபி திட்டத்திற்காக தமிழ் வர்த்தகர்கள் நன்கொடைகளை வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தங்க ஆபரண விற்பனையாளர் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த அமைப்பில் அதிகமான தமிழ் வர்த்தர்கள் அங்கம் வகிப்பதாகவும் படைவீரர் வீடமைப்புத் திட்டத்திற்கு இந்த அமைப்பு இரண்டு மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply