உள்நாட்டு கைத்தொழில்களை பாதிக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடமில்லை : பசில்

உள்நாட்டு கைத்தொழில்களையும், கைத்தொழிலாளர்களையும் பாதிக்கக் கூடிய வகையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உள்நாட்டு கைத்தொழில்களை பாதிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரபல வெளிநாட்டு நிறுவனமொன்று யோகட் உற்பத்திசாலையொன்றை நிறுவுவதற்கு அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சிறியளவில் உற்பத்திகளை மேற்கொள்ளும் உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார். ஒரு மில்லியன் வீட்டுப் பொருளாதார அலகுகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டு மக்களின் பொருளாதார இயலுமையை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply